தேர்தல் 2011

தனக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை பா.ம.க. உறுதி செய்து கொண்டுவிட்ட போதிலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் பா.ம.க.வை முன்வைத்தே பெரும்பாலான கட்சிகள் பேசி வருகின்றன.

திமுக அணியில் பா.ம.க. இடம் பெறும் என்றாலும் 2006 அளவுக்குத் தொகுதிகள் கிடைக்காது என்று பேசப்பட்ட நிலையில், முந்தைய 31 தொகுதிகளைப் போராடிப் பெற்றுவிட்டார் அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

காங்கிரஸ் கட்சி சுமார் 80 தொகுதிகளைக் கேட்ட நிலையில், பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முந்தைய அளவுக்கே பா.ம.க.வுக்கு கிடைத்துவிட்டதால், அதை ஒட்டியே மற்ற கட்சிகளின் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.

திமுக அணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திமுக குழுவுடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பா.ம.க.வுக்கு கொடுத்துள்ளதில் பாதியையாவது தங்களுக்குத் தர வேண்டும் என்கின்றனர்.

கடந்த தேர்தலில் அதிமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்தது. சென்னையில் அதிமுகவுக்கு கணிசமான வெற்றி கிடைத்ததற்கு தங்கள் ஆதரவுதான் காரணம் என்று இந்தக் கட்சியினர் கூறிவருகின்றனர்.

2006-ல் அதிமுக அணியில் 9 தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் இப்போது அதைவிட கூடுதலான தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர்.

80 தொகுதிகள் கேட்டு வந்த காங்கிரஸ் கட்சி இப்போது நெருக்கடியில் சிக்கியிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். கடந்த முறை 48 தொகுதிகளில் இக் கட்சி போட்டியிட்டது. திமுக அணியில் கைவசம் கூடுதலாக உள்ள 23 தொகுதிகளில் (கடந்த முறை இடதுசாரிகளுக்கு ஒதுக்கிய எண்ணிக்கை) விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கியது போக மீதியைத்தான் காங்கிரஸ், திமுக பங்கிட்டுக் கொள்ள வேண்டும். எனவே 32 தொகுதி கூடுதலாகப் பெறுவது சாத்தியமற்றது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.

இருந்தாலும் முடிந்தவரை அதிகமான தொகுதிகளைப் பெற்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

2006-ல் திமுக அணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இந்த முறை எட்டுக்கும் குறையாத அளவில் தொகுதிகளை எதிர்பார்க்கிறது.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு அளித்த முதல்வர், தேர்தலிலும் அதை வழங்குவார் என்று அந்தத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

அதிமுக அணியில் தேமுதிக சேருமா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை. தேமுதிக வராவிட்டால் பா.ம.க.வை அதிமுக சேர்த்துக் கொள்ளக்கூடும் என்ற வாய்ப்புக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

தேமுதிகவுக்கும் கூட்டணி சேருவதாக இருந்தால் அதிமுக மட்டுமே இப்போதைக்கு உள்ள வாய்ப்பாக உள்ளது. வேறு வழியில்லாத சூழ்நிலையில் அதிகமாக தொகுதி கேட்டு பேரம் பேசும் வாய்ப்பும் தேமுதிகவுக்கு இப்போது குறைந்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கூட்டணி வாய்ப்பை உதறிவிட்டு தேமுதிக தனியாக நிற்பது தற்கொலைக்குச் சமம் என்பது அவர்களின் கருத்து.

திமுக அணியில் பா.ம.க.வுக்கு முந்தைய அளவில் தொகுதி ஒதுக்கியிருப்பதால், அதிமுக அணியில் தங்களுக்கும் அதேபோல ஒதுக்க வேண்டும் என மதிமுக கோருகிறது. கடந்த முறை போட்டியிட்டதுபோல 35 தொகுதிகளையாவது தர வேண்டும் என அதன் தலைவர்கள் வலியுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது.

2006-ல் கூட்டணியில் இருந்ததைவிடக் கூடுதலான கட்சிகள் இப்போது இருப்பதால், தொகுதிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று அதிமுக தரப்பில் ம.தி.மு.க.வுக்கு கோடிட்டுக் காட்டியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்து கொண்டுவிட்ட பா.ம.க.வைக் காட்டியே தங்கள் கோரிக்கையை முன்வைக்கின்றன இதர கட்சிகள். இதனால் சிக்கலில் சிக்கிக்கொண்டிருப்பது என்னவோ தி.மு.க.வும், அதிமுகவும்தான்.

நன்றி தினமணி

குறிச்சொற்கள்: , ,

விட்டதைப் பிடிக்க துடிக்கும் பாமக-பாடம் கற்குமா அதிமுக?

ஒரே ஒரு தோல்விதான். ஆனாலும் இமயமலையே கவிழ்ந்து போனதைப் போன்ற ஒரு பெரும் கவலையுடன், இழந்த செல்வாக்கை மீண்டும் பறிக்கும் நோக்கில், மின்னல் வேகத்தில் செயல்பட்டு படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பாமகவின் வைராக்கியம் அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பென்னாகரம் இடைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு இன்னொரு இடைத் தேர்தல். எதிர்க்கட்சியான அதிமுக வோ, தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறியே தென்படாமல் சோம்பிப் போய்க் கிடக்கிறது. ஆனால் அனைவரது கவனத்தையும் தற்போது வெகுவாக ஈர்த்திருப்பது பாமகதான்.
கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் ரேஞ்சுக்கு படு வேகமாக செயல்பட்டு வருவது பாமக மட்டுமே.

பாமகவின் இந்த சுறுசுறுப்பான, மின்னல் வேக பணிகள் வியக்க வைத்துள்ளது. இழந்த பெருமையை தட்டி எழுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. இதையடுத்து எப்படி வந்தது இந்தத் தோல்வி, எங்கே போனார்கள் நமக்காக வாக்களித்து வந்த வன்னியர்கள் என்ற கேள்விகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்கள், ஊர் ஊராகப் போய் மக்களின் கருத்தை அறிவது என தீவிரமாக இறங்கினார் ராமதாஸ்.

இந் நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தல் வந்துவிட தனது இழந்த செல்வாக்கை நிலைநாட்ட படு தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ராமதாஸ்.

பென்னாகரம் தொகுதியின் முக்கிய வாக்கு வங்கியே வன்னியர்கள்தான். எனவே இங்கு வெற்றி பெற்றால் தான் அடுத்த தேர்தலில் திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணியில் சேர்ப்பார்கள் இல்லாவிட்டால், அதோ கதி தான் என்பதை ராமதாஸ் தெளிவாகவே உணர்ந்துள்ளார்.

பாமகவின் எதிர்காலமே இந்த இடைத் தேர்தல் முடிவைப் பொறுத்தது தான் என்பதால் அக் கட்சியினரும் படு வேகமாக உள்ளனர்.
வெற்றி அல்லது குறைந்தபட்சம் 2வது இடத்தையாவது பிடித்தாக வேண்டும் என்ற இலக்குடன் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் ராமதாஸ் தலைமையில் பாமகவினர்.

பாமக முதன் முதலாக 1991ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது பென்னாகரத்தில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சுப்ரமணியம், 32 சதவீத வாக்குகளையும் அள்ளி 2வது இடத்தைப் பிடித்தார்.

1996ல் நடந்த தேர்தலிலும் பாமக தனித்தே போட்டியிட்டது. அப்போது பென்னாகரத்தில் போட்டியிட்ட ஜி.கே.மணி அபார வெற்றி பெற்றார். 2001ல் நடந்த தேர்தலி்ல கூட்டணி வைத்து போட்டியிட்டது பாமக. அப்போதும் மணிதான் வென்றார்.

2006ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமகவுக்கு பென்னாகரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் மணி மேட்டூருக்கு மாறினார். இத்தொகுதியில் பெரியண்ணன் போட்டியிட்டு வென்றார். இவர் பாமகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியின் சுமார் 2 லட்சம் வாக்காளர்களில், ​ஒவ்வொரு வாக்காளரின் ஆதரவையும் தங்கள் கட்சிக்குத் திருப்ப வேண்டும் என்ற திட்டத்தோடு,​​ தேர்தல் வியூகம் அமைத்து,​​ பாமக​ செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு 100 வாக்காளருக்கும் ஒரு களப் பணியாளர் வீதம்,​​ 2,000 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இரவு பகலாக தொகுதியை சுற்றி வருகின்றனர்.

அப்பணியாளர்களை ஒருங்கிணைக்க 30 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.​ ஒவ்வொரு மையத்துக்கும் அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் இப்போதைய எம்.எல்.ஏக்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர,​​ தொகுதி முழுவதையும் சுற்றி வரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள்,​​ மொத்தமுள்ள 48 பஞ்சாயத்துகளில்,​​ குறிப்பிட்ட பஞ்சாயத்துகளை தங்கள் சொந்த பொறுப்பில் எடுத்துக் கொண்டு தேர்தல் பணி செய்கின்றனர்.​ குறிப்பாக,​​ டாக்டர் ராமதாஸே, தனக்கென 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டுள்ளாராம்.

அதேபோல, அன்புமணி ராமதாஸ்,​​ ஜி.கே.​ மணி,​​ காடுவெட்டி குரு,​​ வேல்முருகன் உள்ளிட்டோரும் தலா 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டு தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தேர்தல் பணிக்குழுத் தலைவராக செயல்படும் எம்.எல்.ஏ வேல்முருகன் கூறுகையில், எங்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடந்த 3 மாதங்களாக தொகுதியின் அனைத்து கிராமங்கள்,​​ அனைத்து வீதிகளுக்கும் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்.​

மேலும் எங்கள் களப்பணியாளர்கள் மூலம்,​​ ஒவ்வொரு வாக்காளரையும் இதுவரை 30 தடவைக்கு மேல் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளோம்.​ வன்னிய மக்களுக்கு ராமதாஸ் செய்த சாதனைகள் மற்றும் கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வியால் சந்தித்த வேதனைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி வருகிறோம்.​ எனவே,​​ திமுகவின் பணபலத்தையும் மீறி,​​ நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்.

பாமகவின் இந்த துடிப்பான பணிகளைப் பார்க்கும்போது மறுபக்கம் அதிமுகவின் சவக் களையான முகம் தான் நினைவுக்கு வருகிறது.

பாமகவுக்கு கிடைத்தது ஒரு தோல்வி. ஆனால் அதிமுகவோ கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் தொடர்ந்து இரு மக்களவைத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும், அனைத்து இடைத் தேர்தல்களிலும் தோல்வியைத் தான் சந்தித்து வருகிறது. ஆனாலும் அந்தக் கட்சி அதைத் துடைக்கும் வகையிலோ, தோல்விக்கு என்ன காரணம் என்பதை அறிவதிலோ ஒரு கவனமும் செலுத்தியதாகத் தெரியவில்லை.

கட்சியினரை உற்சாகப்படுத்தி, தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் எந்த முயற்சியிலும் ஜெயலலிதா ஈடுபடவில்லை. அதை விட கொடுமையாக, பென்னாகரத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

பாமகவினரின் துடிப்பையும், தவிப்பையும் பார்த்தாவது அதிமுக பாடம் கற்குமா என்று தெரியவில்லை.

காதலுக்கும், மதத்திற்கும் எப்போதும் ஒத்துவராது. சுதந்திரமும், அடிமைத்தனமும் கைகோத்து நடக்க முடியாது என்பது இயற்கைதானே! ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் நாள் வரும்போது, ஒரு விவாதம் வருகிறது. இப்போது அது மெல்ல மெல்ல முற்றி மோதலாகிக் கொண்டிருக்கிறது.

காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள், இரண்டு, மூன்று விதமான காரணங்களைச் சொல்கின்றனர். பண்பாட்டுச் சீரழிவு என்றும், மேலைநாட்டு இறக்குமதி என்றும், வணிக உத்தி என்றும் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ‘வாலன்டைன் டே’ என்னும் பெயர் வேண்டுமானால் இறக்குமதியாக இருக்கலாம். காதல் இறக்குமதி அன்று. அது நம்பழந்தமிழ்ப் பண்பாடு. அதை ஏன் நாம் மறுக்க வேண்டும் ? அந்தக் குறிப்பிட்ட நாள் மேலைநாட்டவரால் குறிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக அதனை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டுமா என்ன ? அப்படிப் பார்த்தால், மகளிர்தினம், மனித உரிமைகள் தினம் போன்றவற்றிற்கான நாள்களும் கூட அங்குதானே குறிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் நாம் புறந்தள்ளி விட்டோமா ? தள்ளுவது சரியா ?

உலகமே வணிகமயமாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில், காதலர் தினம் மட்டும் அதற்கு விதிவிலக்காக நின்று விட முடியாது. எனவே அதனைக் காரணம் காட்டிக் காதலர் தினத்தை எதிர்ப்பது பொருந்தாது. இந்துத்துவவாதிகள் அந்நாளை எதிர்ப்பதற்கு, மறைக்கப்பட்ட காரணம் ஒன்று

உண்டு. காதல் எப்போதும் சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆதலால், காதலை அனைவரும் ஏற்றுக் கொண்டால், சாதிய இறுக்கம் உடைந்து போகும். சாதிய இறுக்கம் இல்லையெனில், இந்துமதத்தின் வருணாசிரமத்தை எவராலும் காப்பாற்ற முடியாது ? இதுதான் உண்மையான காரணம். இதனை மறைத்துக் கொண்டு, பண்பாடு காப்பதாய் இங்கு ஒரு பாசாங்கு நடக்கிறது.

சென்ற காதலர் தினத்தில், கையில் தாலிகளுடன், சங் பரிவாரக் கும்பல், திருச்சி மலைக் கோட்டைப் பக்கம் அலைந்தது. யாரேனும் காதலர்கள் தென்பட்டால், உடனே அவர்கள் கையில் தாலியைக் கொடுத்துக் கட்டச் சொல்வது. மறுத்தால் அவர்களை அடித்து உதைப்பது. எவ்வளவு பெரிய கருத்தியல் வன்முறை இது! இவ்வருடமும் இதே போன்ற வன்முறையை, சென்னை உள்ளிட்ட தலைநகரங்களிலும் அரங்கேற்றுவது என்று அவர்கள் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல்.

சாதி மத எதிர்ப்பாளர்கள் அனைவரும் காதலர் தினத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அன்றைய தினம் காதல் குறித்த கலை இரவுகளைக் கூட நடத்தலாம். சாதி மறுப்புத் திருமணங்களை ஊர் ஊராக நடத்தி வைக்கலாம். கருத்தரங்குகள் நடத்தலாம். பல்வேறு வழிகளிலும், காதலின் சிறப்பை வலியுறுத்துவதற்கு அந்த நாள் பயன்படட்டும்!

http://www.keetru.com/thamizhar/feb09/loversday.php

குறிச்சொற்கள்:

ஐக்கிய நாட்டு சபை செயலாளர் ஜெனரல் பான் கி மூன், டெல்லி வந்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசின் அலுவலகத்துக்கு சென்ற அவர், டாக்டர் அன்புமணி ராமதாசுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், உலகில் எந்த ஒரு சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவலகத்துக்கும் நான் சென்றது இல்லை. இந்தியாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சுகாதாரத்துறையில் மிக சிறப்பாக செயலாற்றுகிறார். புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதிலும், நுண் கிருமிகளால் பரவும் நோய் ஒழிப்பு பணியிலும் அவர் சிறப்பாக செயலாற்றுகிறார். அவரை உலகின் மிக சிறந்த பொது சுகாதார சாம்பியன் என்றே அழைக்கலாம்” என்றார். பருவ மாற்றத்தால், உலக அளவில் ஏற்பட இருக்கும் சுகாதார விளைவுகள் பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

திருமங்கலம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் ஏழாவது சுற்று எண்ணிக்கை முடிவில் (காலை 10.05 மணி நிலவரப்படி) திமுக 37,030 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

அதிமுக : 19,847. திமுக., அதிமுக.,வை விட 22,499 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளது.

தேமுதிக: 5088;

திருமங்கலத்தில் திமுக முன்னிலை

Posted by: சாரல் on: ஜனவரி 12, 2009

மதுரை: திருமங்கலம் இடைத்தேர்தல் நான்காவது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் (காலை 9.35 மணி நிலவரப்படி) திமுக 30,736 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக : 13,317. திமுக., அதிமுக.,வை விட 17,400 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளது. தேமுதிக: 2958; சமக: 150; திருமங்கலம் தொகுதி ஓட்டுகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று துவ்ஙகியது. திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் லதா அதியமான், அ.தி.மு.க., சார்பில் முத்துராமலிங்கம், தே.மு.தி.க., சார்பில் தனபாண்டியன், ச.ம.க., சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,55,647 பேர். இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள்: 1, 38, 127. ஓட்டுப்பதிவு ஜன., 9ம் தேதி நடந்தது. ஓட்டு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன், ஓட்டு எண்ணப்படும் இடமான மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு ஓட்டு எண்ணும் பணி துவங்கி உள்ளது. 250 துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள இந்த கல்லூரி வளாகத்திற்கு வெளியே 50 உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கல்லூரி வளாகத்திற்குள் பொதுமக்கள் நிற்க மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுகள் எண்ணப்படும் அரங்கத்திற்குள் கம்பி வலை கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் மற்றவர் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது

வெட்கமில்லாத கருணாநிதி

Posted by: சாரல் on: December 2, 2008

கருணாநிதி குடும்பம் ஒன்றாகி விட்டது. ஆனால் இவர்கள் குடும்ப சண்டையில் இறந்து போன மூன்று பேரின் குடும்பங்கள் நிலை என்ன ??

கருணாநிதியெல்லாம் தமிழினத்தலைவராம் ? வெட்கமில்லாத தலைவர், அவரை கொண்டாடும் மூளை இல்லாத உடன்பிறப்புகள்.

அழகிரிக்கும் – ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டியில் தொடர்ந்து பலர் பலியாகி இருக்கிறார்கள். வெளியே அதிகம் தெரியாமல் இறந்தவர்கள் எத்தனை பேரோ ?

அழகிரியால் கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன். திமுகவின் முன்னணித் தலைவர்களில ஒருவரான தா.கிருட்டிணன், கருணாநிதி, இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். அடிமட்ட அளவிலிருந்து கட்சியின் முன்னணிப் பதவிகளுக்கு வந்தவர். தனிப்பட்ட வாழ்க்கையில் தா.கிருட்டிணனுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. சொத்துப் பிரச்சினை உள்பட எந்த விதப் பிரச்சினையும் இல்லாமல் அவர் இருந்து வந்துள்ளார். சொந்த ஊரிலும் நல்ல செல்வாக்கும், பெயரும் உள்ளவர்.

அழகிரி தன்னுடைய கூலிப்படை மூலம் உட்கட்சி பூசல் காரணமாக தா.கிருட்டிணனை கொலை செய்தார். ஆனால் கலைஞரும், ஸ்டாலினும் இது திமுக மீது களங்கம் ஏற்படுத்த ஜெயலலிதா செய்யும் சதி என்று கூறி தா.கிருட்டிணனுக்கு தூரோகம் செய்தனர்

அழகிரி – மாறன் சண்டையில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகின. அவர்களின் விபரம்

மதுரையில் அழகிரியின் அடியாட்கள் நடத்திய வெறியாட்டத்தில் பலியானவர்களில், கோபிநாத், வினோத்குமார் ஆகிய இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். தினகரன் அலுவலக கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்தனர்.

இவர்களில் கோபிநாத்தின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை. கீழக்கரையில் உள்ள முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று, எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பிரிவில் டிப்ளமோ பெற்றவர். இவரது தந்தை கோகுலதாஸ். இறப்பதற்கு முன்தினம்தான் தனது 25வது பிறந்த நாளை கொண்டாடினார், கோபிநாத்.

பலியான மற்றொரு இன்ஜினியர் வினோத்குமார் (24), மதுரை பைபாஸ் சாலையில் உள்ள வேல்முருகன் நகரைச் சேர்ந்தவர். இவரது தந்தை முருகேசன். சிவகங்கை மாவட்டம் திருமான்சோலையில் உள்ள பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் படித்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பி.இ. பட்டம் பெற்றவர், வினோத்குமார்.

மற்றொருவர் தினகரன் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் முத்துராமன்

சொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

மீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. மன்னார் கடற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காணிக்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.

வங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை. இலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா? யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.

அப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.

இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும்? பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை? என்றார் கொளத்தூர் மணி.

தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி:

கடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.

கடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.

புதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:

மேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும். அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.

பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.

சிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல்லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. ராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையா?

சொந்த மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.

தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

நன்றி : கீற்று

பராளுமன்றத்தில் மீண்டும் கூக்குரல். எலியும் பூனையும் கைகோர்த்து நின்றன. இந்த முறை விலைவாசி உயர்ந்துபோனதாக குற்றச்சாட்டு.

“வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா….” என்கிறார் நிதியமைச்சர்.

“விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதற்கெல்லாம் மந்திரக்கோல் எதுவும் இல்லை,” என்கிறார் பிரதமர்.

வர்த்தக அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கை செய்தி.

பாராளுமன்றத்தில் எழுந்த கூக்குரல் சாதாரணமென்று அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. வெங்காயம் விலையேறிப் போனதற்காக ஆட்சியைப் பறிகொடுத்தவர்களும், அந்த தேர்தலில் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற பெரு மூச்சுடன் இன்றைய பாராளுமன்றத்தில் நின்றுகொண்டோ உட்கார்ந்து கொண்டோ இருப்பதை தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய ஆளும் கட்சி இதற்கு பொருத்தமான விலையை வரப்போகும் தேர்தல்களில் கொடுத்தாக வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்து போயிற்று. வசதி படைத்த இந்தியர்களைக் காட்டிலும் அன்றாடங் காய்ச்சிகள் தான் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு செல்கிறார்கள் என்பதால் ஆளும் கட்சியின் வயிற்றிலும், கூட்டணிக் கட்சிகளின் அடிவயிற்றிலும் புளி கரைக்கத் தொடங்கிவிட்டது.

விளைவு கூட்டணிக் கட்சிகள் பிரிந்து மறுபடியும் கூட வாய்ப்பு இருக்கிறது. புதிய வடிவத்தில்.

ஆக்கப்பூர்வமாக செயல்பட மறந்துபோன அரசு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. மத்தியதர வகுப்பினருக்கு வரிச்சலுகைகள், ஆறாவது ஊதியக்கமிஷன், விவசாயக்கடன் தள்ளுபடி, சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் என்றெல்லாம் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடப்பாரையை விழுங்கி விட்டு இஞ்சிக் கஷாயம் குடித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட விலைவாசி உயர்வு அளவு கடந்த 13 மாதங்களில் இல்லாத 6.68 சதவீதத்தை எட்டியிருக்கிறது. உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பால்பொருட்கள், இரும்பு, உருக்கு என்று விலைவாசி உயர்வின் கொடுங்கரங்களில் சிக்கிய பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

இப்போதைய விலைவாசி உயர்வில் கவலைதரக்கூடிய விஷயம் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இருக்கும் அதிகமான இடைவெளிதான். மொத்த விற்பனையாளர்கள் பொருட்களைப் பதுக்கிவைத்து செயற்கையான விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறார்கள்.

பதுக்கல்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும், தனக்கு அந்த அதிகாரம் இருந்தால் நாளைக்கே நடவடிக்கை எடுப்பேன் என்றும் நிதியமைச்சர் கூறுகிறார் பிரதமரின் முன்னிலையில்.

டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சி குடிமகனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிகாரம் கிடைக்கிறது. நாளைக்கே அவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவனும் உடனடியாக நடவடிக்கை எடுப்பான்.

இரு நபர்களுக்கிடையே அல்லது இரண்டு நிறுவனங்கிளுக்கிடையே ஒரு பொருளை ஊக விலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இணையதளம் மூலம் செய்து கொள்ளப்படுகின்ற ஓர் ஒப்பந்தம் தான் ஆன்லைன் வர்த்தகம். அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150க்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது இணையதள விற்பனைக்குள் வந்துள்ளன. ஊக வணிகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், பதுக்கலுக்கும், கள்ளச்சந்தைக்கும், விலையேற்றத்துக்குமான ஒரு ஏற்பாடுதான் ஆன்லைன் வர்த்தகம் என்பது. இதனுடைய இன்னொரு முகம் ரூபாயின் மதிப்பை உள்நாட்டில் செல்லாக்காசாக்கும் முயற்சி.

பொதுவாக விலையை தீர்மானம் செய்யும் காரணிகள் பொருட்களின் தேவை (DEMAND) எவ்வளவு என்பதும், சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் வந்திருக்கின்றன (SUPPLY) என்பவையும்தான்.

ஒரு பருப்பு வியாபாரி தன்னிடம் இருக்கும் 5 டன் உளுத்தம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கு விற்க இரண்டாவது வியாபாரியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். வெறும் ஒப்பந்தம் மட்டும்தான். சரக்கு இடம் மாறுவதில்லை.

ஒரு மூன்றாவது வியாபாரி கிலோ ஐம்பது ரூபாயானாலும் பரவாயில்லை என்று கேட்கும்போது 30 ரூபாய்க்கு தான் விற்ற அதே பருப்பை 40 ரூபாய்க்கு ஒப்பந்தம்போட்டு வாங்கி 50 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்.

ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்கள் முன்கூட்டியே வாங்கப்பட்டுவிடுவதால், அரசின் உணவுப்பொருள் வர்த்தகக் கழகம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கமுடியாமல் முடக்கப்பட்டு விடுகிறது.

பதுக்கலை ஒழிக்கவேண்டிய நடவடிக்கைகள் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்று கைவிரிக்கிறார் நிதியமைச்சர். வாக்குச்சாவடிக்கு மக்கள் போகும்போது மக்களுக்கு பிரச்சினைகள் மட்டும்தான் தெரியும். மாநில அரசு, மத்திய அரசு என்ற வேறுபாடெல்லாம் அவர்களுக்குத் தெரியவேண்டியதில்லை.

வியாபார சக்திகளை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சந்தையில் விளையாட அனுமதித்து விட்டு தற்போது விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வார்த்தைகள்.

பத்திரிக்கைகள் பணவீக்கம் என்று சுருக்கமாக தீர்ப்பு எழுதிவிடுகின்றன. பணவீக்கம் 7 சதவீதம் என்றால் பொருட்களின் விலை 7 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். போனவருஷம் இதே மாதத்தில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இந்த வருஷம் இதே மாதத்தில் 107 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும். பணவீக்கத்தை கணக்கிடும் பணியை இந்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும் சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்படுகிறது.

6% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகளின் வைப்பீட்டுக்கும், கடன் பத்திரங்களுக்கும் 6% வட்டி கிடைத்தது. இது RISK FREE RETURN. பங்குச்சந்தையில் வரும் வருமானம் இதற்கு நேர்மாறானது. வங்கியைவிட பலமடங்கு வருமானம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

வங்கி வட்டிவிகிதம் குறையத்தொடங்கியதும் பணம் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தையை நோக்கி திருப்பி விட்டனர். இதனால் SENSEX நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டு போனது. நம்முடைய நிதியமைச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார்.

பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல் என்ற கொள்கைகளின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் பின்னடைவுகளில் இருந்து நம்முடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் சுயசார்புத் தன்மையை நாம் இழந்துவிட்டோம்.

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதையோ, விவசாயத்திற்கு அடிப்படையான மலிவான உடலுழைப்பு இந்தியாவில் நிறைய இருக்கிறது என்பதையோ நம்முடைய ஆட்சியாளர்கள் அடியோடு மறந்துபோனதுதான் இன்றைய சோகம்.

கலப்புப் பொருளாதாரத்தையும், கிராமத் தொழில்களையும் ஆதரித்த நம்முடைய பழம்பெரும் தலைவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. தாராளமயம் என்ற பெயரில் கிராமத் தொழில்களை அழித்து, வேலையிழந்த தொழிலாளர்களை நகரங்களை நோக்கி நகரவைத்து புதுப்புது சேரிகள் உருவாக வழிசெய்ததுதான் அண்மைக்கால ஆட்சியாளர்களின் சாதனை.

நுகர்வுக்கலாச்சாரத்தை மக்களிடையே புகுத்தி அதன்மூலம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற மாயத்தோற்றத்தில் மயங்கியதும் இதே ஆட்சியாளர்கள் தான்.

நாடு முன்னேறிக் கொண்டிருந்தாலும் அதன் பயன் ஏழைமக்களைச் சென்றடையவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதும் இதே ஆட்சியாளர்கள்தான்.

நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு விளை நிலங்களை மேம்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையில்லை. ஓர் ஆண்டில் பெய்யவேண்டிய மொத்த மழையில் 80 சதவீதம் நான்கே மாதங்களில் பெய்து தீர்த்து விடுகிறது. இந்த மழைநீரை சேமிக்கவும் பகிர்ந்தளிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகள்தான் இன்றைய இந்தியாவின் முதல் தேவை. நமது விவசாயிகளின் துன்பம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர்களின் தற்கொலைகளின் பின்னணியே அந்தக் கதைதான்.

இந்தியாவில் உணவுப்பொருள் விநியோகத்தில்தான் குறைபாடே ஒழிய உணவு உற்பத்தியில் அல்ல. உணவு உற்பத்தியில் மிகக் குறைவான முன்னேற்றம், விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை, உணவு தானியங்களின் சேதாரம் ஆகியவை இந்நாட்டின் தலையாய பிரச்சினைகள் ஆகும்.

இந்தியர்களின் ஆதாரத் தொழிலான வேளாண்மைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அரசு கொடுக்காதவரை எதுவுமே பலனளிக்கப் போவதில்லை.

நம்முடைய ஊரில் உளுந்து பயிரிடும் விவசாயி கிலோ 18 ரூபாய்க்கு தன்னுடைய உற்பத்திப் பொருளை விற்றுவிட்டு, அதே ஊரில் கிலோ 36 ரூபாய்க்கு உளுத்தம்பருப்பை வாங்கவேண்டிய அவலம்தான் இன்றைய பிரச்சினை.

உற்பத்தியிலோ விற்பனையிலோ எந்தவித பங்களிப்பையும் செய்யாத நிழல் தரகர்கள் ஊகவணிகத்தின் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க அரசு அனுமதிப்பதிக்கும் வரை அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கப் போவதில்லை.

நன்றி : கீற்று

பெண் குழந்தைகளை நேசிக்க ஊக்கப்படுத்தும் சிறந்த ஊடக முயற்சிகளுக்கு ஐ.நா. மக்கள் தொகை நிதியமைப்பு (United Nations Population Fund – UNFPA) சார்பில் “லாட்லி’ விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2007-ம் ஆண்டில் “மண்ணைக் காக்க பெண்ணைக் காப்போம்” என்ற சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக மக்கள் தொலைக்காட்சிக்கு இந்த விருது அண்மையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சுமார் 3650 தடவை ஒளிபரப்பப்பட்டது.

வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் மக்களுக்குத் தேவையான, அவர்களை நல்வழிப்படுத்துகிற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம். புகைப்பழக்கம். குடிப்பழக்கம், வரதட்சிணை போன்ற தீய வழக்கங்களுக்கு எதிரான மற்றும் தூய்மைக்கு ஆதரவான சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ள இந்த விருது, எங்கள் பணி மேலும் சிறக்க உதவும் என மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமணி

குறிச்சொற்கள்:
Follow

Get every new post delivered to your Inbox.