சாரல்

சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் இன்று வீரவணக்கம்

Posted by: சாரல் on: அக்டோபர் 25, 2007

“எல்லாளன் நடவடிக்கை” மூலம் சிறிலங்கா வான் படைக்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வீரகாவியமான சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு மக்கள் உணர்வெழுச்சியுடன் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலிகள் அணியின் தீரமிகு தாக்குதலில் வீர வரலாறாகிய மாவீரர்களுக்கு வன்னியில் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

எதிரிக்குப் பேரிழிவை ஏற்படுத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நிகழ்வுகள் மாவீரர்களின் பெற்றோர் அல்லது உறவினர் இல்லங்களில் நடைபெற்று வருகின்றன.

மக்கள் அணிதிரண்டு சென்று தமது வீர வணக்கங்களை செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே 21 கரும்புலிகளையும் ஒன்றுசேர நினைவுகூரும் வீரவணக்க நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வு வன்னியில் அனைத்து கோட்டங்களிலும் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. சிறப்பாக அமைக்கப்பட்ட இடங்களில் கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கும்.

மக்களின் வணக்கம் முடிவுற்றதும் மாலை வீரவணக்க நிகழ்வுகள் நடைபெறும்.

எங்கும் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

நிறுவனங்கள், பாடசாலைகள் முன்பாக கரும்புலிகள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

வீதியெங்கும் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டுள்ளன.

2 பதில்கள் -க்கு "சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் இன்று வீரவணக்கம்"

போரில் இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு என் அஞ்சலிகள்..
வெற்றிகள் தொடரட்டும்..

“சாவினைத் தோள்மீது தாங்கிய” பாடலின் mp3 வடிவம் அல்லது பாடல்வரிகளுக்கான இணைப்பைத் தர முடியுமா? நன்றி.

மறுமொழி இடுக