மழைச் சாரல்

குருவாயூர் கோவிலுக்குள் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி

Posted on: ஜூன் 2, 2007

திருவனந்தபுரம்: குருவாயூர் கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை. ஆதிசங்கரர் சட்ட திட்டங்களை மாற்ற டியாது என குருவாயூர் கோவில் பாதுகாப்பு பரம்பரை குழு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் வயலார் ரவி தன் மகன் ரவிகிருஷ்ணனுடன் குருவாயூர் கோவிலுக்கு சென்றிருந்தார். அவரது மனைவி கிறிஸ்துவர் என்பதால், அவருடைய மகன் குருவாயூர் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக கூறி கலச பூஜை மற்றும் புண்ணிய பூஜைகள் நடத்தப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அமைச்சர் சுதாகரன், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் கோவிலின் பரம்பரை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் பல தந்திரிகள் கலந்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தந்திரிகள் நம்பூதிரிபாடு, ராமன்றம் நம்புதிரி ஆகியோர்,

“குருவாயூர் கோவிலுக்கு ஆதிசங்கரர் தன் காலத்திலேயே சட்ட திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார். அதை மனிதர்கள் நினைத்தால் மாற்ற முடியாது. அவை பரம்பரியமாக இருந்து வருபவை.

இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் புண்ணிய பூஜை நடத்த வேண்டும் என்பது விதி, அதனால் நாங்கள் பூஜை நடத்தினோம்.

இனிமேல் இந்துக்கள் அல்லாதவர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது” என்று கூறினர்

1 Response -க்கு "குருவாயூர் கோவிலுக்குள் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி"

kuruvayur appan temple is very betiful

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: