மழைச் சாரல்

திருமங்கலத்தில் திமுக முன்னிலை

Posted on: ஜனவரி 12, 2009

மதுரை: திருமங்கலம் இடைத்தேர்தல் நான்காவது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் (காலை 9.35 மணி நிலவரப்படி) திமுக 30,736 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக : 13,317. திமுக., அதிமுக.,வை விட 17,400 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளது. தேமுதிக: 2958; சமக: 150; திருமங்கலம் தொகுதி ஓட்டுகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று துவ்ஙகியது. திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் லதா அதியமான், அ.தி.மு.க., சார்பில் முத்துராமலிங்கம், தே.மு.தி.க., சார்பில் தனபாண்டியன், ச.ம.க., சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,55,647 பேர். இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள்: 1, 38, 127. ஓட்டுப்பதிவு ஜன., 9ம் தேதி நடந்தது. ஓட்டு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன், ஓட்டு எண்ணப்படும் இடமான மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு ஓட்டு எண்ணும் பணி துவங்கி உள்ளது. 250 துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள இந்த கல்லூரி வளாகத்திற்கு வெளியே 50 உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கல்லூரி வளாகத்திற்குள் பொதுமக்கள் நிற்க மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுகள் எண்ணப்படும் அரங்கத்திற்குள் கம்பி வலை கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் மற்றவர் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது

1 Response -க்கு "திருமங்கலத்தில் திமுக முன்னிலை"

வருங்கால முதலமைச்சர்,கடந்த கால் ந்டிகை,

காலில் விழும் கூட்டம் எல்லாம் தமிழின உணர்வு

இன்னும் செத்துவிட வில்லை என்பதைப் புரிந்து

கொள்ளட்டும்.கம்யூனிஸ்ட்,காங்கிரசு கபோதிக் கூட்டம்

இல்லாமலேயே தமிழினம் உணர்வு பெறலாம்.

உணர்வு பெற வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: