மழைச் சாரல்

Archive for the ‘பொதுவானவை’ Category

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1919-லிருந்தே தமிழகத் திரைத்துறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தாலும் அது தன் அடையாளத்தைப் பெற்றது 1931ல்தான். திரையில் தமிழ் மொழியை உச்சரிக்க ஆரம்பித்த பின்னரே இம்மாற்றம் நிகழ்ந்தது. முதல் படமான கீசக வதம் 1916-ல் தமிழகத்தில் வெளி வந்த போது அதற்கு மொழி கிடையாது. வெறும் மவுனப் படம் மட்டுமே. அந்த ஆரம்பகாலப் படங்களும் சூரிய ஒளியிலேயே படம் பிடிக்கப்பட்டது.

படங்கள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் எடுக்கப்பட்டன என்பதால் நடிகர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்தோடும். சூரியக் கதிர்கள் கண்களை கூசச் செய்யும். எனவே, நடிப்பவர்கள் கண்களைச் சுருக்குவதும், இமைகளை அடிக்கடி மூடுவது என்பதும் இயல்பாக இருந்தது. கூடவே புராணப் படங்கள் என்பதால் காலில் செருப்பு அணிய முடியாமல் தரைச் சூட்டில் கால்கள் கொப்பளிக்கும் நிலை. மகிழ்ச்சி, காதல், உற்சாகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டங்களில்கூட சுடும் தரையில், கொப்பளித்த கால்களில் ஏற்பட்ட வலியால் முகச்சுளிப்பையும் சேர்த்தே படம் பிடிக்க வேண்டி இருந்தது.

பெருத்த வேதனையில் படப்பிடிப்பு நடந்த அந்நாட்களில் பெண்கள் படங்களில் நடிக்கத் தயங்கினர். நாடக நடிகைகளும் புகைப்படக் கருவி தங்களின் அழகை அபகரித்து விடும் என்ற நம்பிக்கையில் நடிக்க மறுத்து விட்டனர். எனவே, ஆரம்ப காலத்தில் துணிந்து நடிக்க வந்த ஐரோப்பியப் பெண்களையும், ஆங்கிலோ-இந்தியப் பெண்களையுமே நடிக்க வைத்தனர். இதனால்தான் 1917-ல் நடராச முதலியார் தயாரித்து இயக்கிய ‘திரௌபதி வஸ்திராபரணம்’ மவுனப் படத்தில் துச்சாதனனால் துகிலுரியப்படும் திரௌபதியாக நடித்தவர் ஒரு ஐரோப்பியப் பெண். அக்காலத்தில் மிக அதிகமாக ஊதியம் பெற்று நடித்தவர் ‘லியோச்சனா’ எனும் ஆங்கிலோ இந்தியப் பெண். இவரின் இயற்பெயர் மரைன் ஹில்.

மேலைநாட்டினர் செய்த ஆராய்ச்சியின் விளைவாக ஊமைப்படங்கள் பேசும் படங்களாக உருமாறின. பம்பாய் பட நிறுவனமான ‘இம்பீரியல் மூவிடோன்’ அதிபர் அர்தே ஷீயர் ஈரானி இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம்ஆரா’வைத் தயாரித்தார். இவரே தமிழின் முதல் பேசும் படமான “காளிதாஸ்’ திரைப்படத்தைத் தயாரித்தவர். சென்னை சென்ட்ரல் திரையரங்கில் 21-10-1931-ம் நாள் இப்படம் திரையிடப் பட்டது.

1934-ல் ராஜா சான்டோ இயக்கத்தில் வெளிவந்த ‘மேனகா’ திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சி கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இவ்வாறு இத்தனை வலிகளையும் வேதனைகளையும் சுமந்துதான் தமிழ்த்திரைப்படம் பேசத்தொடங்கி முழுமை பெற்றது.

பெண்கள் நடிக்கப் பயந்து போய் ஓடி ஒளிந்ததும் மறுத்ததுமான காலத்தைக் கடந்து இன்று தமிழ் சினிமா முழுவதுமே பெண்களின் கவர்ச்சிக் காட்சிகளால் நிரம்பி வழிகின்றன.

அந்தக் கவர்ச்சியின் ஓர் அத்துமீறல்தான் அண்மையில் வெளிவந்த ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் பெண்மையை பொத்தாம் பொதுவாகக் கேவலப்படுத்தி இருப்பது. நாயகியை ஐந்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும் பாலியல் வல்லுறவு கொள்வதாகக் காண்பிக்கப்படும் அக்காட்சி படுகேவலம். ஆடைகளை அவிழ்ப்பதும், உள்ளாடைகளைக் களைவதும் என்பதாக அமைந்திருக்கும் அந்தக் காட்சியின் முடிவு தமிழ்ச்சினிமாவினை உமிழத் தோன்றுகிறது. இத்தகைய காட்சி எந்தத் தமிழ்ச் சினிமாவிலும் இதுவரையில் வரவில்லை.

திரைப்படங்கள் எதார்த்தம் கலந்தாக இருக்க வேண்டும் என்பது சரியானதுதான் என்ற போதும் அவை கலாச்சார, பண்பாட்டுத் தளத்தினைச் செப்பணிடுவதாக இருக்க வேண்டும் என்பதுவும் முக்கியம். பெண்கள் மத்தியில் ‘பருத்திவீரன்’ படம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், பெண்கள் அமைப்புகள் இத்திரைப்படத்தை எதிர்க்காமல் போனது வியப்பாகவே இருக்கிறது. சமூகப் பொறுப்பு என்கிற வரையறைக்கு கட்டுப்படாதவர்கள்தான் இத்தகைய படங்களை எடுக்கவும் முடியும். அமீர் அந்தப் பட்டியலில் முதல் நபராக இருக்கிறார்.

நான்கு சுவர்களுக்குள் நடக்கிற படுக்கையறைக் காட்சியை நாடெங்கும் திரையில் ‘நீலப்படம்’ போன்று காட்டுவதில் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் காலாவதியாகிப் போனது என்பதை இப்படம் நிரூபித்து இருக்கிறது. சமூகப் பொறுப்பில்லாத படங்கள் பொழுது போக்குச் சாதனம் என்கிற சராசரியான வடிவத்தை மீறி ‘காமத்திற்கு வடிகால்’ என்று உருவம் கொள்வது கண்டனத்திற்கு உரியது.

பருத்திவீரன் படத்தில் வரும் காட்சியை எல்லாம் காண்பித்து சமூகத்தில் ஒரு மாற்றமும் நடக்கப்போவதில்லை. ஆனால், சமூகச் சீரழிவு அதிகம் என்பதாலேயே இதைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

சமூக உணர்வுள்ளோரும், பெண்கள் அமைப்புகளும் எதிர்க்காமல் விட்டதால், இது போன்ற படங்களால் ஏற்படும் கொச்சைத்தனம் உச்சம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உணர்வு பெறுவோம்!
உறுதியுடன் எதிர்ப்போம்!!
இப்போக்கு வளராமல் தடுப்போம்!!!

சிறுபான்மையின மக்களின் மீது அரசு மற்றும் காவல்துறை நடத்தும் அத்துமீறல்கள் குறித்தான ஆவணப் படம்

மதானி – கைதியின் கதை

பண்பாடுள்ள மக்களைக் காட்டு மிராண்டிகள் வெற்றி கொள்வது இயல்புதான். திராவிடர்கள் ஆரியர்களிடம் வீழ்ந்ததற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் நேருவும், ராகுல சாங்கிருத்தியாயனும். வெற்றிதான் முக்கியம்; வழிமுறைபற்றிக் கவலைப் படவேண்டாம் என்றுதான் சாணக்கியனிலிருந்து சோவானவர்கள் வரை – அக்கிரகாரத்து அறிவாளிகள் கூட்டம் – உபதேசிக்கின்றன.

ஆரிய இதிகாச, புராண, இலக்கியக் கொள்கை கூட தர்மயுத்தம் குறித்தோ, யுத்த தர்மம் குறித்தோ கரிசனம் கொள்வதில்லை. நாங்கள் போர் தொடுக்கப் போகிறோம்; ஆதலால் உங்கள் நாட்டிலுள்ள கால் நடைகள், (ஆவினங்கள்) அவற்றைப் போன்றே சாது வான (!) பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையோர், கர்ப்பிணிகள் போன்றவர்களைப் பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத் துங்கள் (புறம்) என்று பகை நாட்டரசுக்கு ஓலை அனுப்புவதும், பகைவரின் மரணத்தைக் கூட கண்ணீரால் கௌர விப்பதும் திராவிட – தமிழினப் பண்பாடாகும்.

மரண வேதனையில் துடிப்பவனிடம்கூட அவனுடைய பலவீனத்தைப் பயன்படுத்திப் பிச்சை கேட்கும் தோரணையில் அவனுடைய புண்ணியத்தின் பலனை அபகரித்து, கொன்று தீர்ப்பதும், அது தான் தர்மம் என்று உபதேசிப்பதும் ஆரியக் குணமாகும் (கீதை)

கலைஞரின் தலையை வெட்டிவந்தால் பரிசு தருவேன் என்று அறிவித்த வேதாந்தியோ, அதை மௌனமாய் ரசித்த குருமூர்த்தி, சோ, சுப்பிரமணியசாமி, கணேசன் அத்வானி, போன்ற ஆரியக் குஞ்சுகள் இறந்தால்கூட மனம் உடைந்து வருந்துவதுதான் பெரியார், அண்ணா கலைஞர் போன்ற திராவிட இனத் தலைவர்களின் இயல்பு.

இழவு வீட்டில்கூட பிடுங்கியவரை லாபம் என்று கருதுவதுதான் அவாள்குல வழக்கம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச் செல்வன் மறைவுக்குத் தமிழக முதல்வர் கலைஞர் செலுத்திய கவிதாஞ்சலி வேத புரத்தாரையும் வேதா இல்லத்தாரையும் வழக்கம்போல் அவர்களுடைய சிறுமையை வெளிப்பட வைத்திருக்கிறது.

“தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவருக்கு எப்படி அஞ்சலி செலுத்தலாம்? கருணாநிதி அரசைக் கலைக்கவேண்டும். ஆளுநரிடம் அறிக்கை தருவோம், பிரதமரிடம் வலியுறுத்துவோம்’’ என்று அக்கிரகாரத்து மனிதர்கள் தாவிக் குதிக்கிறார்கள்.

அரசதிகாரம் தங்கள் இனத்திடமே இருக்க வேண்டும் என்று அவர்கள் தவிப்பதும், தகிப்பதும், நமக்குப் புரிகிறது. அதற்காக நிர்வாண ஊர்வலம் நடத்தலாமா? காந்தியக் கொள்கையை, வர்ணாஸ்ரம தர்மத்தில் அவருக்குள்ள பிடிப்பை, கடுமையாக எதிர்த்தவர் தந்தை பெரியார்,

சனாதனிகளின் சாம்ராஜ்யத்தில் ஜனநாயகம் இருக்க முடியாது என்பதால் இந்திய சுதந்திர தினத்தையே துக்க தினம் என்று அறிவித்தவர் தந்தை பெரியார்.

ஆனால், அதே பெரியார் தான் காந்தியின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தார். காந்தியடிகளின் நினைவைப் போற்றும் விதமாய் இந்தியாவுக்குக் ‘காந்தி நாடு’ என்று பெயர் சூட்டுமாறு பரிந்துரைத்தார்.

காமராசர் தலைமையிலான காங்கிரசை எதிர்த்து அரசியல் இயக்கம் நடத்திய போதிலும் காமராசரின் அருங்குணங்களைப் பாராட்டத் தவறியதில்லை அறிஞர் அண்ணா.

காமராசர் வாழ்ந்த போதே, அவருக்கு எதிரான அரசியல் பேசிய காலத்தில்தான், திராவிட முன்னேற்றக் கழகம் அவருக்குச் சிலை எழுப்பி விழா எடுத்தது.

கலைஞர் இல்லாமல் இருந்திருந்தால் காமராசரின் மரணம் கூட மௌனத்தில் மூழ்கடிக்கப் பட்டிருக்கும். அன்றைய அரசியல் சூழ்நிலை அப்படித்தான் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கால கட்டத்தில் கலைஞர் அரசு கவிழ்க்கப் பட்டதற்குக் காமராசர்மீது கலைஞர் கொண்டிருந்த பற்றும் ஒரு காரணமாகும்.

அக்கிரகாரத்து பெரியவர் ராஜாஜியின் அரசியல், ஆன்மீகக் குலதர்மக் கொள்கைகளைத் திராவிட இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வந்த போதிலும், அவரது தனித் தன்மைகளை மதிக்கத் தவறியதே இல்லை. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று கருதுவது திராவிட இனத் தலைவர்களின் பண்பாடு.

ஆரியக் குஞ்சுகளை அளவுக்கு அதிகமாகவே கௌரவிக்கிறார் கலைஞர் என்று தமிழ்ச் சான்றோர் பேரவை மேடைகளிலும், கலைஞரிடம் நேரிலேயும் நாம் கூட வருத்தம் தெரிவித்ததுண்டு.

அண்ணா அறிவாலயத்தில், அக்கிரகாரத்துக் கவிஞர் வாலிக்கு, கலைஞர் விருது வழங்கிய விழாவில் முன் வரிசையில் என்னைப் பார்த்த கலைஞர், “வாலி போன்றவர்களுக்கெல்லாம் நான் விருது வழங்கலாமா என்று நண்பர் அருணாசலம் போன்றவர்கள் கேட்கலாம்… என்று தமது உரையைத் தொடங்கிய கலைஞர், வாலிபோன்றவர்களும் தமிழில்தானே எழுதுகிறார்கள். ஞானசம்பந்தரின் கருத்துக்கள் பிடிக்காமல் இருக்கலாம். அவர் பேசும் தமிழை எப்படி வெறுக்க முடியும் என்று என் போன்றவர்களைச் சமாதானப் படுத்தினார்.

நோயை எதிர்ப்பது நோயாளியைக் கொல்வதல்ல. எதிரியை வீழ்த்துவது என்பது அவரிடமுள்ள கசப் புணர்வைத் தகர்ப்பதில்தான் இருக்கிறதேயன்றி, தனி மனிதக் கொலையில் இல்லை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் – இதுதான் தமிழர் பண்பாடு.

மனுவாதிகளுக்கு இந்த மனித நாகரிகம் புரிவ தில்லை.

“அழுகிறவனிடம் அபகரி
புலம்புகிறவனிடம் பிடுங்கு
புகலற்றவனைத் தீர்த்துக்கட்டு…’’

இம்மாதிரியான வக்கிர உணர்வுகளின் உறைவிடம் தான் அக்கிரகாரம் என்று நமக்குத் தெரியும் என்பதால்.

‘கலைஞர் அரசை ‘டிஸ் மிஸ்’ செய் என்கிற அற்பத் தனங்கள் நமக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ தரவில்லை.

ஆனால், வேறுசில சிந்தனைகளை நமக்கு ஏற்படுத்துகின்றன. இருள்நீக்கி சுப்பிரமணிய சங்கராச்சாரியை அன்றைய முதல்வர் ஆணைப்படி கைது செய்யப்பட்டபோது வடஇந்தியப் பார்ப்பனர்கள் கூடத் துடித்தார்கள். அப்போதும் கூட கைது செய்தவர்மீது அவர்கள்தம் கோபத்தைக் காட்டவில்லை. இது சோனியா காந்தி சதி, போப்பாண்டவர் சதி என்று எங்கெங்கோ பாய்ந்தார்களே தவிர கைது நடவடிக்கையின் பின்னணிகளைப் புறந்தள்ளிவிட்டு, இன உணர்வை ஒன்று திரட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள்.

அந்த இன உணர்வு தமிழர்களிடம் இருக்கிறதா?

‘கிரிமினல்’ சங்கர் நேபாளத்தில் மன்னராட்சி நடந்த காலத்தில் – 1996இல் – அங்கே போய் “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு இந்து சாம்ராஜ்யத்துக்காகப் போராடுகிறார். ஒவ்வொரு இந்துவும் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும்’’ என்று தான் பேசியதாகத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனிடம் சொல்லிப் பெருமிதம் கொண்டாராம். ’அவாள்’ பார்வையில் பிரபாகரன் ஒரு ‘இந்து’ இந்துக்களின் ஆதரவாளர்களான, இரட்சகர்களான, இந்து தர்ம சீலர்கள் தமிழீழ விடுதலையை எதிர்ப்பது ஏன்? புலிகளின் இயக்கம் தடை செய்யப்படவேண்டும் என்று குதிப்பது ஏன்? தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் மரணத் துக்காகக் கருணாநிதி கண்ணீர் விடுவது ஏன்? – என்று குதர்க்கம் பேசுவது ஏன்?

அவர்களுடைய நோக்கம் இந்துக்களின் நலன் அல்ல. மத நம்பிக்கையுள்ள சூத் திரர்களின் அடிமைப் புத்தியை ‘இந்து’ என்கிற பெயரில் ஆரிய தாசர்களாக மாற்றுவதுதான்.

இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதையோ, ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதையோ விடுதலைப் புலிகள் கூட ஆதரிப்பதில்லை. ராஜீவ் காந்தி படுகொலை பற்றிய புலன் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டு, உண்மையை மாத்திரமே தெரிவது என்று தொடர்ந்தால், சுப்பிரமணியம் சாமி, சந்திரா சாமி, நரசிம்மராவ், முதலாம் ‘புஷ்’ சி.ஐ.ஏ… என்று ஒரு பட்டியலே நீளக் கூடும்.

‘முதலாம் புஷ்’ நடத்திய ஈராக் போரின்போது அமெரிக்கப் போர்விமானங்களுக்கு இந்தியாவிலே ‘பெட்ரோல்’ நிரப்ப அனு மதித்திருந்தது அன்றைய சந்திரசேகர் அரசு.

“அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இந்தியாவில் பெட்ரோல்’ நிரப்ப அனுமதிப்பது, அமெரிக்காவின் போர் வெறியை இந்தியா ஆதரிப்பதாக அர்த்தப்படுத்தப்படும்.

இந்தியாவின் நடுநிலைக் கொள்கைக்கு அது எதிரானதாகும். எனவே அன்னியப் போர் விமானங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது’’ என்று ராஜீவ்காந்தி கண்டனம் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியின் கண்டனம் குறித்து முதலாம் புஷ்ஷிடம் அமெரிக்க செய்தியாளர்கள் கேட்ட போது, “அதை (ராஜீவ் காந்தியின் நடவடிக்கையை) நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்’’ என்று அறிவித்தார்.

இந்தப் பின்னணியில் தான் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாதது ஏன்?

எதையும் ஆரிய நலனுக்கு ஆதரவாக மாற்றும் அக்கிரகாரத்து அறிவு ஜீவிகளின் அணை கடந்த ஆசைதான் தமிழ்ச் செல்வனின் மரணத்தின் போதும் வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நிலவும் போர்ச் சூழலில், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் வகிப்பவர் தமிழ்ச் செல்வன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும்.

அங்கே ஏற்படும் அமைதி இந்திய நலனுக்கும் உகந்தது என்று நல்லிதயத்தோடு சிந்திக்கும் எவருக்கும் தமிழ்ச் செல்வனின் மறைவு பேரிழப்பாகவே தெரியும். அதிலும் தமிழ்ச் செல்வன் ஒரு தமிழன் என்கிற உணர்வு கொண்டால்?

போரழிவு நின்று சமாதானம் நிலவுவாதா என்கிற மனிதாபிமானமும், தமிழினம் வதைபடுகிறதே என்கிற பந்தபாசமும் கலைஞருக்கு இருக்கிறது எனவே அவர் அரசியல் சாசன விதிப்படி ஆட்சியில் இருக்கக் கூடாது என்று கூச்சலிடுகிறவர்கள் ‘யார்’ அவர்களின் நோக்கம் என்ன என் பதைத் தமிழர்கள் நன்றே அறிவார்கள்.

காந்தியைக் கொன்ற – அதை வரவேற்ற இன்றுவரை கோட்சே கும்பலைக் கண்டிக்காத ஒரு பாசிசக் கூட்டம், ஜனநாயக வேடமிட்டாலும், ‘இந்து’ வேடமிட்டாலும், எந்த ஒப்பனையில் வந்தாலும் கபடத்தனம் அறியப்படாமல் போகாது.

சிறுபான்மையின மக்களின் மீது அரசு மற்றும் காவல்துறை நடத்தும் அத்துமீறல்கள் குறித்தான ஆவணப் படம்

மதானி – கைதியின் கதை

தமிழ்ச்செல்வனின் படுகொலை உலகத்தமிழர்கள் அனைவரிடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தமிழக தமிழர்கள் இந்த படுகொலையை கண்டித்து, தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அது குறித்த ஒரு தொகுப்பு

Tamilselvan

கலைஞரின் இரங்கல் கவிதை

செல்வா எங்கு சென்றாய்?

எப்போதும் சிரித்திடும் முகம் –
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் – உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் உளமெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

மனித குலம் நிச்சயம் மன்னிக்காது- குறிப்பாக தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்: மருத்துவர் இராமதாஸ்

ஈழத் தமிழர்களின் உரிமைக் குரலாம் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த பாதகச் செயலை- இனவெறித் தாக்குதலை மனித குலம் நிச்சயம் மன்னிக்காது- அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை

மக்களின் உரிமைப் போராட்டத்தில் உயிர் தந்த தமிழ்ச்செல்வன்: இந்திய கம்யூனிஸ்ட்

உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கிறது: கி.வீரமணி


தம்பி தமிழ்ச்செல்வா! உன்னை எரிக்கவில்லை…ஏற்றியிருக்கிறோம்: பாரதிராஜா

திருந்தாத கிழக்குப் பதிப்பகமும் திருத்துவதற்கு நீதிமன்றத்தில் வழக்கும்

சென்ற இதழில், தமிழக பதிப்பகத் துறையில் கார்ப்பரேட் தாதாவாக வளர்ந்து வரும் கிழக்கு பதிப்பகத்தின் நூல் தயாரிப்பு முறைகேடுகள் பற்றியும், தறிகெட்டு அலையும், அதன் மோசடி விதம் குறித்தும் எழுதி, அதன் ஒரு நூல் திருட்டை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் இருந்தோம்.

‘முல்லைப் பெரியாறு சில உண்மைகள்’ என் நூல் திருட்டை நாம் அம்பலப்படுத்தியது தமிழக பதிப்புத் துறையினரிடமும், அறிவார்ந்த வாசகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பலரும் நமக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் இவ்வளவு கேவலப்பட்ட பின்னரும் ‘கிழக்கு பதிப்பகம்’ சற்றும் கவலைப்படவில்லை. எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம் தனது வருத்தத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

கூச்ச நாச்சமின்றி அடுத்தவர் நூலை எடுத்து தனது பெயரை மாற்றி வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் திருந்தும் என்ற நம்பிக்கை இனியும் இல்லை.

ஆகவே முல்லைப் பெரியாறு நதிநீர், பிரச்சினைகள்’ நூலில் இளுமாநில அரசுகளின் ஒப்பந்தத்தை தமிழாக்கம் செய்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் எஸ்.நாகராஜன், தனது நூலை களவாடி நூல் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர்கள் மீதும், நூல் ஆசிரியர் மீதும் விரைவில் வழக்குத் தொடர இருக்கிறார்.

இது குறித்து வழக்கறிஞர் எஸ்.நாக ராஜன் கூறுகையில், ‘ஒரு வழக்கறிஞரின் அறிவையே திருடும் கிழக்குப் பதிப்பகம் பணம் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்று தெரிகிறது. ஆகவே அதன் மீது இன்னும் இரண்டொரு நாளில் வழக்குத் தொடர உள்ளேன் என்று கூறினார்.

கிழக்குப் பதிப்பகம் இனியாவது திருந்துமா? தனது திருட்டை நிறுத்துமா?

http://www.keetru.com/vizhippunarvu/aug07/kizhakku.php

நன்றி : கீற்று

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் சாலை வரை தண்ணீர் வந்தது. இதனால் சுனாமி வருகிறதோ என்று மக்கள் பீதியடைந்தனர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஆசிய நாடுகளை சுனாமி அலைகள் புரட்டிப் போட்டன. அதன் பின்னர் அவ்வப்போது கடல் கொந்தளிப்புகளும், சீற்றங்களும், கடல் நீர் வீடுகளுக்குள் புகுவதும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் நேற்று காலையில், சென்னையில் மெரீனா, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. பெரும் சீற்றத்துடன் அலைகள் எழுந்தன. பெரும் சத்தத்துடன் பொங்கி எழுந்த அலைகளால் மக்களிடையே பெரும் பீதி எழுந்தது.

சீறிப் பாய்ந்த கடல் நீர் மெரீனா கடற்கரையைத் தாண்டி கிட்டத்தட்ட அரை கி.மீ. தூரம் தொலைவில் உள்ள கடற்கரை சாலை வரை வந்தது. இதனால் சுனாமி வந்து விட்டது என்று மக்கள் பீதியடைந்து கடற்கரையிலிருந்து ஓடினர்.

ஆனால் சாதாரண கடல் கொந்தளிப்புதான் எனத் தெரிய வந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த கடல் சீற்றத்தில் சிக்கி நொச்சிக்குப்பம் பகுதியில், இரு படகுகள் அடித்துச் செல்லப்பட்ன.

கடல் கொந்தளிப்பால் கடல் நீர் உட் புகுந்ததால் கடற்கரை மணலில் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கிக் காணப்பட்டது. இதேபோல காசிமேடு எண்ணூர், தாழங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால் கடற்கரையோர மக்கள், மீனவர்கள் பீதியுடனேயே காணப்பட்டனர்.